தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது...... ’’அமைச்சர் கடம்பூர் ராஜீ, தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவதற்காக தூது விடுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர் கடம்பூர் ராஜீ பயத்தில் குழம்பிப்போய் பேசி வருகிறார்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தோர்தலில் அமமுக வெற்றி பெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் அதிமுகவையும், இரட்டை இலையையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு முக்கிய பொறுப்பாளர்கள் விலகிக் கொள்ள வேண்டும், அமமுக தோற்றால் நாங்கள் அணைவரும் அதிமுகவில் இனைந்து விடுகிறோம் என்று விடுத்த சவாலிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜீ பயத்தில் குழம்பிப்போய், நான் அதிமுகவில் இணைய தூதுவிடுவதாக கூறுகிறார்.
அதிமுகவில் இணைவதற்கு எதற்காக தூதுவிட வேண்டும், மொட்டை கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம், அதிமுகவில் சேரு வதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம். எனவே நான் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்து கொண்டு கடம்பூர் ராஜீ பேசினால் அவரின் அமைச்சர் பதவிக்கு அழகு என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்துவதாக வெளியாகிய செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவில் யாருக்கும் தலைமைப்பண்பு கிடையாது. அதனால் தான் கட்சி யில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை, மேடைக்கு மேடை, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் என அனைவரும் உலறி வருகின்றனர்.
ஆளுமையற்ற தலைமை இருப்பதால் இது போன்ற விரிசல்கள் ஏற்படத்தான் செய்யும் எனத் தெரிவித்தார். மேலும் மின்வெட்டு இருப்பதை ஒப்புக்கொள்ளும் மின்துறை அமைச்சர் பிரச்சனையை சரி செய்வதை விட்டுவிட்டு டி.வி. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதில் தீவரமாக உள்ளார். மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களில் கோட்டை விடுகின்றனர். எனவே இந்த அதிமுக அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையை 2ரூபாய் குறைத்தது போல் தமிழகத்தில் குறைக்கவில்லை அல்லது மத்திய அரசிடம் வலியுறுத்தி விலை யேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த இரண்டிற்கும் தமிழக அரசிடம் துணிச்சல் கிடையாது என குற்றம் சாட்டி பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்