இந்திய வங்கிகள் பலவற்றில் 9000 கோடிக்கு கடனை பெற்றுவிட்டு, அதை திருப்பி அளிக்காமல் லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையா, நிதி அமைச்சரை சந்தித்துவிட்டுதான் லண்டன் சென்றேன் என்றார். அதன் பின் ராகுல் காந்தி, அருண் ஜெட்லி அவருக்கு சலுகை வழங்கியுள்ளார் என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில் சுப்பிரமணியன் சுவாமி,” எப்படி அவருக்கு அளிக்கப்பட்ட லுக்கவுட் நோட்டீஸ் நீர்த்துப்போனது. அதாவது லுக்கவுட் நோட்டீஸில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தாலே போதும் என்று எப்படி மாறியது என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
தற்போது இக்கேள்விக்கு விளக்க்கம் தரும் வகையில் சிபிஐ ஒரு பதிலை அளித்துள்ளது. இது பற்றி சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:- மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவர், அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்யுமாறு எந்த காவல் அமைப்பி டமும் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அது தவறான முடிவாக மாறிவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்