மதுரை மத்தியசிறை எஸ்.பி.ஊர்மிளாவை பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் மிரட்டியதை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவையும் ஆடியோ மூலம் பேசி மிரட்டியிருக்கிறார். பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மதனகலா அப்பகுதியில் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் பிரபல புல்லட் நாகராஜன் ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த விஷயம் புல்லட் நாகராஜூக்கு தெரிந்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் மதன கலாவிற்கு ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் நீ என்ன பெரிய விஜயசாந்தினு நினைப்பா யாரைப்பார்த்தாலும் அடித்து உதைத்து கைது செய்து வருகிறாய். அதை முதல நிறுத்து பொம்பலைன்னா பொம்பலை மாறி நடந்துக்கனும் அதை விட்டுட்டு என் ஆட்களை அடிச்சு உதைக்கிறது.கைது செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டேனு வச்சுக்க கண்கானாத இடத்துல ஈமொச்சு போய் கிடப்ப ஜாக்கிரதையாக இருந்துக்க நான் சொல்றதை கேட்டு ஒழுங்கா நடந்துக்க இல்லைனா தொலைச்சுபுடுவேன். இவ்வளவு பேசுறியே என் வீட்டு முன்னாடி நூறு போலீச நிப்பாட்டிக்க முடிஞ்சா என்னை உள்ள வந்து அரஸ்ட் பன்னிபாரு அங்கேயே நான் செத்து போயிருவேன். இந்தபாரு உன்னை எங்க தொட்டா எப்படி வழிக்கும்னு தெரியும் அதற்கு ஏத்த வேலைகளை செஞ்சுறுவேன் நான் சாதாரன ஆள் கிடையாது என மிரட்டி இருக்கிறார். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்-யையும் எஸ்.பி.பாஸ்கரனையும் மிரட்டி இந்த ரவுடி புல்லட் நாகராஜன் ஆடியோ வெளியிட்டிருந்தான்.
இதனால் டென்சன் அடைந்த எஸ்.பி. பாஸ்கரன், டிஎஸ்பி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் மதனகலா, தலைமையில் தனிப்படை தனிப்படை அமைத்து ரவுடி புல்லட் நாகராஜனை தேடிவந்தனர். இந்தநிலையில்தான் புல்லட் நாகராஜன் மேல்மங்களத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பெரியகுளத்திற்கு பல்சர் பைக்கில் வரும்போது வைகை டேம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையிலான காக்கிகள் ரவுடி புல்லட் நாகராஜனை விரட்டி பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு கைது செய்யப்பட்ட ரவுடி புல்லட் நாகராஜனிடம் இன்ஸ்பெக்டர் மதனகலா அதிரடி விசாரணை செய்து வருகிறார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்