img
img

தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு - மத்திய அரசின் வழக்கு முடித்து வைப்பு
வெள்ளி 07 செப்டம்பர் 2018 14:59:19

img

சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கும் 1999ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் மரண  தண்டனை விதித்தது.  ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதில், 2000ம் ஆண்டில் நளினியின் கருணை மனுவை ஏற்ற தமிழக ஆளுநர், அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தர விட்டார். இதன்பின்னர் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத்தலைவர் நீண்ட காலம் எடுத்துக்கொண்டதால்  2012ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்சநீதிமன்றம்.    இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.

இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.  ஆனால்,  சிபிஐ விசாரித்த வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம்  மாநில அரசிற்கு இல்லை என்று கூறி, 7 பேரை விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் கடிதம் குறித்து மூன்று மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.    ஆனால், 7 பேரையும் விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது 7 பேரை யும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய  நீதிபதிகள்,  விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்  என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் கூறிய நீதிபதிகள்,  மத்திய அரசின் வழக்கை முடித்து வைத்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img