சிம்பு என்றாலே வம்பு என்று சினிமா உலகம் சொல்வதுண்டு. மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானத்தில் நடிக்கும்போது அவர் தந்த ஒத்துழைப்பு ‘சிம்பு முன்பு போல் இல்லை’ என்று பேச வைத்தது. ஆனாலும், வம்பு வழக்குகள் சிம்புவை விடாது போலும்.
கடந்த 2013-ல் ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம், அரசன் என்ற டைட்டிலில் சிம்புவை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்தது. அதற்காக ரூ,1 கோடி சம்பளம் பேசி, ரூ.50 லட்சத்தை அட்வான்ஸாக சிம்புவிடம் தந்தது. இந்த நிலையில், தங்களின் படத்தில் சிம்பு நடிக்காததால், வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கொடுப்பதற்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அந்நிறுவனம்.
நீதியரசர் கோவிந்தராஜ் முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறித்த காலத்தில் படத்தயாரிப்பு வேலைகளைத் துவங்காததால், தனக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது. எனவே, அந்த அட்வான்ஸ் தொகையை முடக்க வேண்டும் என்று சிம்பு தரப்பில் தெரிவித்தனர். ஆனால், படப்பிடிப்பு பணிகள் துவங்காததால், தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கான ஆதாரங்களை சிம்பு சமர்ப்பிக்கவில்லை.
அதனால், அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.85 லட்சத்தை ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு சிம்பு தரப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். நான்கு வாரங்களில் இதுகுறித்த உத்தரவாதத்தை வழங்காவிடில், சிம்பு வுக்குச் சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏ.ஸி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என்று நீதியரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்