மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தன்னை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று கூறிவரும் மு.க.அழகிரி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும், அதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என மு.க.அழகிரி தெரிவித்து வந்தார். மேலும் கடந்த 7 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், திமுகவை காப்பாற்றவே எங்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். என்னை கட்சியில் சேர்த்துக்கொ ண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார். கட்சியில் இணைய நான் தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. 1200 பொதுக்குழு உறுப்பி னர்கள் மட்டுமே திமுக இல்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர். எனது மகன் தயாநிதிக்கு திமுகவில் எந்த பொறுப்பையும் கேட்கவில்லை என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்