சமீபகாலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத மிழ்செல்வன் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேக மில்லை. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதல்-அமைச்சர் நியமனம் செய்யப்பட்டு, ஆட்சி தொடரும். 18 எம்.எல் .ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி.மு.க. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆனால் திமுக தலைவர் கலைஞர் இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யாதது ஏன்?. இதில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று உள்ளதற்கு வாழ்த்துகள். ஆனால் சமீபகாலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்