தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம். இதில் யார் வேண்டுமென்றாலும் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கலாம். அதில் நடிகர் விஷால் தண்ணீர் எடுத்து குடிப்பதற்கு நாங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல நடிகர் விஷால் அதிகாரம் பெற்றவர் கிடையாது.
தேர்தல் வரும்போது நல்ல திட்டங்களை தந்த எங்களை தான் மக்கள் ஆதரிப்பார்கள். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். நடிகர் கமல்ஹா சன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை. தேர்தல் என்றால் கம ல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கோஷ்டி மோதல் என்பது கற்பனையான கதை. அவர்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்திப்பது வழக்க மான ஒன்று. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயல்படுகின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. பணியை தொடங்கும். இவ்வாறு கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்