வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஜெயலலிதா மாவட்ட பேரவை அலுவலக திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவரிடம், அ.தி.மு.க. வெற்றிக்காக தனது துணை முதல்வர் பதவியில் இருந்தும் விலக தயார் என அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு தினகரன், இது ஏற்கெனவே ஜெயலலிதா இறந்து அந்த தர்மயுத்தம் நாடகம் ஜெயலலிதா நினைவிடத்திலே தொடங்கியது. இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு, இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று எதிர்த்து வாக்களித்தவர்.
இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் கழித்து துணை முதல் அமைச்சர் பதவியை ஏற்றவர். இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு இவருடைய சுயரூபம் மொத்தமாக தெரிந்துவிட்டதால் நான் பதவியை ராஜினாமா பண்றேன், எனக்கு கட்சிதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு இவரு போயி பாஜகவோட ஏஜெண்டா இங்க செயல்பட்டது எல்லோருக்கும் தெரியும்.
அவரேதான் சொல்கிறார், பாரதப் பிரதமர் சொல்லித்தான் துணை முதல் அமைச்சர் பதவியையே ஏற்றுக்கொண்டேன்னு. குருமூர்த்தி சொல்றாரே, என்கிட்டே சொல்லிட்டுப் போயிதான், என் அட்வைஸ் கேட்டுவிட்டுப் போய்தான் தர்மயுத்தம் நடத்தினாருன்னு. அதனால் பன்னீர்செல்வம் சொல்றதையெல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டாம். நீர் மேல எழுதப்பட்ட எழுத்து. அவ்வளவுதான். இவ்வாறு கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்