செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும். இதில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அழகிரிக்கு வாழ்த்து சொல்ல பாஜகவைச் சேர்ந்த மாவட்ட தலைவர் சசிராமன் உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அழகிரி, பாஜகவை சேர்ந்தவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்ததை பார்த்தவுடன், ஏங்க... நீங்க என்ன இங்க வந்திருக்கீங்க... பாஜக பின்னாடி இருக்குன்னு சொல்றாங்க... நீங்க வந்திருக்கிற பாத்தா அதை உறுதிப்படுத்துற மாதிரியால்ல இருக்கு? என்ன விஷயம்? சொல்லுங்க... என கேட்டார்.
அதற்கு அவர்கள், அண்ணே... வாஜ்பாய் அஸ்தியை கறைப்பது சம்மந்தமா அழைக்க வந்தோம் என தெரிவிக்க, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், ஏம்பா இப்பதான் முதல் கூட்டம் போட்டிருக்கோம், நீங்க என்னென்னா அபசகுணமா வந்து அஸ்தி, அது இதுன்னு... போங்க போங்க என்று சொல்ல, சிறு நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் புறப்பட்டதும், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையை நடத்தினார் அழகிரி.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்