img
img

கலைஞரின் மன்னிப்புக் கடிதம்
வியாழன் 23 ஆகஸ்ட் 2018 14:56:23

img

கலைஞர், தன் நண்பர்களை அதிகம் நேசித்தவர். உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும் நட்பை மறக்காதவர். குறிப்பாக தனது பால்யகாலத் தோழரான திருவாரூர் கு.தென்னன் மீது, அளவுகடந்த அன்பைச் சொரிந்தவர்.


கலைஞர் முதல்வராக இருந்த போது, 2008 அக்டோபரில் கலைஞரைப் பார்க்க அவரது கோபாலபுரம் வீட்டிற்கு வருகிறார் தென்னன். அப்போது ஏதோ ஒரு மூடில் அவரைக் கடிந்து கொள்கிறார்  கலைஞர். தென்னன் திருவாரூருக்குக் கிளம்பிப் போய்விட்டார். அதன்பின், கலைஞர், நண்பனின் மனதைப் புண்படுத்திவிட்டோமே  என்று மனம் வருந்துகிறார்.

அவர் மனம் நண்பனைச் சுற்றியே வட்டமடிக்கிறது.  22-ந் தேதி தலைமைச் செயலகம் வந்து தனது  இருக்கையில் உட்கார்கிறார் கலைஞர். உடனே தனது லெட்டர் பேடை எடுத்து கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்...

அன்புள்ள நண்பர்  தென்னனுக்கு,
நீ சென்னையில் வீட்டுக்கு வந்தபோது, அன்று என்னைக் 
கப்பியிருந்த சோகத்திலும்-கோபத்திலும் 
உன்னை மனம் நோகச் சொன்ன வார்த்தைகளுக்காக வருந்துகிறேன்.
வழக்கம்போல் பொறுத்துக்கொள்க.
என்றும் உன் நண்பன், முக.’ என்று மன்னிப்புக் கேட்பதுபோல் வருத்தம் தெரிவித்து எழுதி, அதில் தன் கைப்படவே தென்னனின் முகவரியையும் எழுதி அனுப்புகிறார்.


ஒரு முதல்வராக இருந்தபோதும், அதற்குரிய அதிகாரப் பெருமிதம் எதுவும் இன்றி,  கலைஞரைப் போல் நட்பைக் கொண்டாடியவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img