கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.
இந்நிலையில், மத்திய அரசையும் தாண்டி கேரளாவுக்கு பலர் நிவாரணம் அளிக்க முன் வந்துள்ளனர். அப்படி முன் வந்தவர்கள்தான் ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவு போன்ற வெளிநாடுகள். ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 700கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இது கேரளா அரசாங்க த்திற்கு கிடைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதிக்க வேண்டும். இதுவரை இந்த நிதியை அனுமதிக்கவில்லை, அனுமதிக்குமா என்பது சந்தேகம்தான். இந்தியா என்ற நாடு தங்களின் பிரச்சனையை தாங்களே தீர்த்துக்கொள்ளும் என்ற மனநிலையை உடையது.
2004ஆம் ஆண்டில் சுனாமி ஏற்பட்டபோது அமெரிக்கா நிதி தருவதாக தெரிவித்தது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அதனை ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். தேவையை கருதி சில சமயங்களில் இந்தியா வெளிநாடுகளின் நிதியை எற்றுக்கொண்டும் இருக்கிறது. இதுவரை மத்திய அரசு கேரளாவுக்கு முதல் கட்ட நிதி உதவியாக 600 கோடி தந்திருக்கிறது. இன்னும் மத்திய அரசு வெளிநாட்டு அரசாங்கள் தருவதாக தெரிவித்த நிதிக்கு வெளியுறவுத்துறை அனுமதி கொடுக்கவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த வட்டாரங்கள் சொல்வதாக கூறுகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்