சென்னை, ஆக. 22- கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தே.மு.தி.க. சார்பில் ஒரு கோடி ரூபா மதிப்பிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினாலும் வரலாறு காணாத கன மழையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது மன வேதனை ஏற்படுகிறது.
கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டு க்கொள்கிறேன். மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்ட கழகங்கள் சார்பில் கேரள மக்களுக்கு ரூபா 1 கோடி மதிப்புள்ள அத்தி யாவசிய பொருட்கள் வரும் 24.08.2018 தேதியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்