அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அஷோக் கெலாட் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்திருக்கும் புதிய பொறுப்ப ளர்களின் விவரங்கள் அடங்கிய அறிவிக்கையை வெளியிட்டார்.
இதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொருளாளராக அகமது படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அகமது படேல் கடந்த பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக செயலராக இருப்பவர். குஜராத் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்கள வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதற்கு முன்னர் பொருளாளராக இருந்த மோதிலால் வோரா, காங்கிரசின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் வெளியுறவுத் துறை தலைவராக ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அந்தப் பொறுப்பு கரண் சிங் வசம் இருந்தது. மேலும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் காங்கிரஸ் கமிட்டி செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் வடகிழக்கு மாநி லங்களுக்கான தேசிய செயலாளராக லூஸினோ ஃபளீரியோவை தலைவர் ராகுல்காந்தி நியமித்திருப்பதாக அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பை சி.பி.ஜோஷி வகித்துவந்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்