img
img

கேரள கோரிக்கையை ஏற்கமுடியாது! வைகை அணையை திறந்து ஒபிஎஸ் பேட்டி!!
திங்கள் 20 ஆகஸ்ட் 2018 17:41:32

img

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் வைகை அணை தொடர்ந்து  பெய்த மழை மூலம் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் அணையில் இருந்து தண்ணீரை  மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்  ஆகிய  மாவட்டங்களில் உள்ள விவசாய பாசன வசதிக்காக துணை முதல்வர் ஒபிஎஸ் திறந்து வைத்தார்.

அப்பொழுது பத்திரிக்கையாளரிடம் பேசிய ஓபிஎஸ்,  ’’இந்த வைகை அணையில் இருந்து எப்பொழுதும் அக்டோபர் மாதம் தான் பாசனவசதிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால்  தற்பொழுது தென்மேற்கு மழையினால் இரண்டு மாதத்திற்கு முன்பே தண்ணீர்  திறந்து விடப்பட்டுள்ளது.

இது பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து  உபரி நீர் இடுக்கி  அணைக்கு செல்வதால் அணையின் நீர்மட்டத்தை 139அடியாக குறைக்க வேண்டும் என கேரளா கோரிக்கை வைத்து வருகிறது. அதனை எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியாது அணை பலமாக உள்ளது.

அதிலும் வல்லுநர்கள் குழுஆய்வு செய்து அணை பலமாக  இருக்கிறது என்று சொன்னதின் பேரில் தான் தற்பொழுது 142 அடி  தேக்க சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கியதின் பேரில் தான்அணையில்  தண்ணீர் தேக்கி வருகிறோமே தவிர அணையின் நீர்மட்டத்தை குறைக்க   வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ,  உதயகுமார் மற்றும்  தேனி திண்டுக்கல் கலெக்டர்களான வினைய், பல்லவி பல்தேவ் மற்றும்  அதிகாரிகள் கட்சிகாரர்கள்  என  பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img