ஈரோட்டில் செப்டம்பர் 15 அன்று ம.தி.மு.க. மாநாடு நடத்துகிறது. பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க. தொடங்கி 25 ஆண்டு விழா, வை.கோ. அரசியல் பயணத்தில் பொன் விழா என இந்த மாநாட்டை முப்பெரும் விழாவாக நடத்துகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். இதில் பா.ஜ.க தவிர காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்கட்சி உட்பட தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் அ.தி.மு.க. தவிர்த்து தி.மு.க.உட்பட மாநில கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அதற்கான ஏற்பாடுகளில் மாநில பொருளாளரான ஈரோடு கணேசமூர்த்தி ஈடுபட்டு வருகிறார் மாநாட்டின் முன் ஏற்பாடாக மேற்கு மண்டல மா.செ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று ஈரோடு தங்கம் மகாலில் பகல் 12 மணிக்கு அக்கட்சியில் பொதுச் செயலாளர் வை.கோ. தலைமையில் நடந்தது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலையில் ம.தி.மு.க. தொண்டர் அணி பயிற்சி முகாம் நடக்கிறது. மாநாட்டு பணிகள் குறித்து வை.கோ. மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்