img
img

ஈரோடு: பத்து கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
வியாழன் 16 ஆகஸ்ட் 2018 16:01:15

img

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி நீர் மேட்டுர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அது அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பவானி சாகர் அணை நிரம்பி உபரி நீராக 50 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டுள்ளது. பவானி ஆறும், காவிரி ஆறும் கலக்கிற ஈரோடு மாவட்டம் பவானி கூடு துறையில் இருந்து மொத்தமாக இரண்டரை லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் பாய்ந்து செல்கிறது. இதனால் பவானி மற்றும் காவிரி கரையோர பகுதி களில் வெள்ள அபாயம் கடுமையாக ஏற்பட்டுள்ளது. 

சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமம் பவானி நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளி யேற்ற ப்பட்டுள்ளார்கள். அதேபோல் பவானியில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாராபாளையம், பள்ளிப்பாளை யம் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் ஓடுகிறது. 

கொடுமுடி அருகே உள்ள காசிபாளையம், ஓஞ்சலூர் என பத்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீ ரால் சூழ்ந்துள்ளது. ஈரோடு பள்ளிபாளையத்தை இணைக்கும் பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்ப ட்டுள்ளது. வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கர்நாடகாவில் மழைபொழிவு அதிகமாக உள்ளதால் மேலும் வெள்ள நீர் கூடுதலாக வரும் என்ற அபாயம் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img