நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொட்டும் மழையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி யேற்றினார்.
நாட்டின் 72-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி னார். பின்னர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் முதல மைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுகின்றனர்.
அதன்படி சென்னை கோட்டையில், கொட்டும் மழையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். பின்னர் முப்படை வீரர்கள் முன்னிலையில், தேசியக்கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2வது முறையாக சுதந்திர தின கொடியேற்றியதில் பெருமை அடைகிறேன். பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த தியாக பூமி தமிழகம். வரலாற்று நாயகர்களை நாம் என்றும் போற்றி வணங்க வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில் தான் துவங்கியது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்