தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் மு.க.அழகிரி. 'தலைவர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லதல்ல. அவரைச் சேர்க்காமல் இருப்பதே நல்லது' என ஸ்டாலினிடம் விளக்கியிருக்கிறாராம் பேராசிரியர் அன்பழகன்.
சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு இன்று காலை வந்த மு.க.அழகிரி, 'கருணாநிதியின் விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர்' எனக் கூறி அறிவாலயத்தை அதிரவைத்துவிட்டுச் சென்றார். அவரது இரண்டு வரி பேட்டி, குடும்பத்துக்குள் பலத்த விவாதமாகியிருக்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு, யார் யாருக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பது குறித்து குடும்ப உறவுகளுக்குள் கருத்து மோதல் நடந்து வருகிறது.
நாளை நடக்க இருக்கும் செயற்குழுவுக்குப் பிறகு, பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதில், தி.மு.கவின் அதிகாரபூர்வ தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதில், அழகிரியின் ரீ-என்ட்ரி குறித்து குடும்பத்தினர் பலரும் வற்புறுத்தி வந்ததால், இதுகுறித்து பொதுச் செயலாளர் அன்பழகனுடன் விரிவாக விவாதித்தார் ஸ்டாலின். கட்சியின் நன்மை கருதி சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார் பேராசிரியர்.
அவர் பேசும்போது, 'அழகிரியை இரண்டு முறை கட்சியை விட்டே நீக்கினார் தலைவர். மீண்டும் தலைவரே அவரைச் சேர்த்திருந்தால் பரவாயில்லை. கட்சியைவிட்டு அவரை நீக்கிய பிறகு, அந்த விவகாரத்தில் தலைவர் உறுதியாக இருந்தார்.
2014-ம் ஆண்டு இரண்டாம் முறை அவரை நீக்கிய பின்னரும், அடுத்த மூன்று ஆண்டுகள் தலைவர் ஆக்டிவ்வாக இருந்தார். அப்போதெல்லாம் அழ கிரியைச் சேர்ப்பது குறித்து அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது ஏதோ அழுத்தம் காரணமாக, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் தலைவரின் முடிவையே மறுபரிசீலனை செய்வதுபோல ஆகிவிடும்.
அதனால்தான் அந்தக் காரியத்தை நாம் செய்யக் கூடாது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை' என உறுதியாகக் கூறிவிட்டார். இந்தக் கருத்தை ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், அழகிரி தரப்பினரோ, " தென்மாவட்டத்தில் அழகிரி இருப்பது அனைத்து வகையிலும் தி.மு.க.வுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். அவர் வந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலினைவிட, அவருடன் இருக்கும் சிலர் உறுதியாக இருக்கின்றனர். கட்சிக்குள் அழகிரி இல்லாவிட்டால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும்" என்கின்றனர்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்