திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை இன்று காலை மு.க ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஸ்டாலினுடன் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை முருகன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் சென்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்