img
img

தி.மு.கவில் கருணாநிதி இனி இல்லை... களமிறங்கிய டெல்லி ஸ்பெஷல் தூதுவர்கள்!
வியாழன் 09 ஆகஸ்ட் 2018 13:14:18

img

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்கவேண்டும் என்பதுதான் தேசியக் கட்சிகளின் திட்டமாக இருந்தது. ஆனால், சமீபமாக காங்கிரஸ் அதில் சுணங்கியிருக்க, பி.ஜே.பி. இந்த எண்ணத்தில் தீவிரமாகச் செயல்படுகிறது. 2016- ஜெயலலிதா மறைய, இப்போது கருணாநிதியும் இயற்கை எய்த, பெரும் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள மாநில கட்சிகளே பரபரக்கு ம்போது, மத்திய பி.ஜே.பி. அமைதியாக இருக்குமா?! அமித் ஷாவின் ஸ்கெட்ச்சில் காய் நகர்த்தத் துவங்கிவிட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

போதாக்குறைக்கு பி.ஜே.பி.-யுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி வைக்கவே விரும்புகிறது என்றும் சமிக்ஞைகள் வெளியாகிறது. இதில் கனிமொழி, அழகிரி இருவருக்கும் அவ்வ ளவாக விருப்பம் இல்லை என்றும் முணுமுணுக்கின்றனர் அத்தரப்பினர்.  இந்த சூழ்நிலையைத்தான் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள திட்டமிட்டி ருக்கிறாராம் அமித் ஷா.  

ஒரு சீனியர் அதிகாரி ஸ்பெஷல் டாஸ்க் எனச் சொல்லி தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் நன்றாகத் தெரிந்த மத்திய உளவு த்துறை அதிகாரி அவர். கருணாநிதி உடல்நலமில்லாமல் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சென்னையில் முகாமிட்டி ருக்கிறார். மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் யார், மாவட்டச் செயலாளர்கள் யார், சமீபத்தில் கட்சியில் களை எடுக்கப்பட்டவர்கள் இருப்பவர்கள் யார் என பலவிதமான அதிருப்தி பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். தி.மு.க-விற்குள் இருக்கும் பி.ஜே.பி. அனுதாபிகள் மற்றும் பி.ஜே.பி-யில் இருக்கும் தி.மு.க அனுதாபிகள் என இரு தரப்பினரையும் உளவுத்துறை தூதுவர்கள் சந்தித்து வருகிறார்கள். இதெல்லாம் ஏன்? 

தி.மு.கவில் அடுத்த சில நாட்களில் மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைவராக நியமிக்கச் சொல்லி ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்கப்போ கிறார்கள். அப்போது அதை எதிர்க்காமல், அதே சமயம்  சில கோரிக்கைகளை முன்வைத்து அதையும் இப்போது அமல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சி எனத் தெரிகிறது. இவற்றுக்கு ஸ்டாலினின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பொறுத்துதான் தி.மு.க. மீதான பி.ஜே.பி-யின் அணுகுமுறை தீர்மானிக்கப்படுமாம். 

இதுபற்றி டெல்லியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ’’தி.மு.க.-வில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எனப் பல கோஷ்டிகள் இருப்பது அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆகிய கட்சிகளுக்குச் சாதகம். கருணாநிதி இல்லாத இந்தச் சூழ்நிலையில் ஸ்டாலினுக்கு எதிராகப் பல பிரச்னைகளை கிளப்பப்போகிறார்கள். குறிப்பாக, கட்சியின் சீனியர்களை புறக்கணித்துவிட்டு, அவரது மருமகன் சபரீசன் கையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கொடுத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. ஸ்டாலின் தலைமையில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. அதன் முடிவுகள் தி.மு.கவை பெரிதும் உற்சாகப்படுத்தவில்லை.

88 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவும் ஸ்டாலின் முயற்சிக்கவில்லை. இதெல்லாம் கட்சியினரிடையே அதிருப்தி மற்றும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிரி கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பியின் வியூ கங்களுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எளிதில் இரையாகக் கூடும். அவற்றைச் சமாளித்து கட்சியை வலுப்படுத்தி நெருப்பாற்றில் கரை சேர்க்க வேண்டிய பெரும்பொறுப்பு ஸ்டாலினிடம் இருக்கிறது. இப்படியான சூழல்களை அநாயாசமாக சமாளித்தவர் கருணாநிதி. அப்படியே ஸ்டாலினும் சமாளிப்பாரா எனப் பார்க்கலாம்!’’ என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img