சென்னை,
காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டதாகவும் உடல் நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 24 மணி நேரத்திற்குப் பிறகே எதுவும் அறிவிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
நேற்று இரவு கிடைத்த தகவலின்படி, கலைஞரின் மனைவியர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். காவேரி மருத்துவமனைக்கு முதன் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வந்தார்.
வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கருணாநிதிக்கு கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டது. 2 தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை அதிகரித்தது. லண்டனைச் சேர்ந்த டாக்டர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டதால் கல்லீரல் சிகிச்சை பயனளிக்காமல் தாமதமாக பலன் கிடைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறார்கள்.
கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் நேற்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரின் மனைவி தயாளு அம்மாள் முதன் முறையாக கருணாநிதியைக் காண நேற்று காவேரி மருத்துவமனைக்குச் சென்றார்.
ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்க ளும் மருத்துவமனைக்கு வந்தனர். தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனைக்கு சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளும் காவேரி மருத்துவ மனைக்கு சென்றுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன்புறம் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்