புதுச்சேரி முன்னேற விரும்பினால், முதலமைச்சர் நாராயணசாமி என்னை பற்றி விமர்சிக்கக் கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தன்னிச்சையாக அதிகாரம் இல்லாத ஆளுநர் ஆய்வு செய்து என்ன பலன்? என்றும் விளம்பரத்திற்காக ஆய்வு செய்து வரும் ஆளுநர், அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிவருகிறார். அவர் போட்ட உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். அதிகாரிகள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி முன்னேற விரும்பினால், முதல மைச்சர் நாராயணசாமி என்னை பற்றி விமர்சிக்கக் கூடாது. ஆளுநர் மாளிகையின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதால் மாநில வளர்ச்சி வேகம் குறையும். மாநில வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட ஆர்வமிருந்தால் ஆளுநர் மாளிகை அதிகாரத்தை விமர்சிக்கக்கூடாது.
ஆளுநர் அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லிக்கான தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என உச்சநீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்