திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹா சன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பத்தரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கோவி.லெனின் உட்பட பலர் கோபாலபுரம் இல்லம் வருகை தந்து நலம் விசாரித்தனர்.
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தமிழ்மாநிலதலைவர் தமிழிசை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இயக்கு நர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொடர்பு கொண்டு கலைஞரின் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் கலைஞரின் நலம் குறித்து நேரில் வந்து விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘’கலைஞர் உயிருக்காக மன்றாடவில்லை; அவரிடம் இயற்கை மன்றாடுகிறது. தமிழக மக்கள் நெஞ்சில் கலைஞர் என்றும் நிலைத்திருப்பார்’’ என்று தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்