சென்னை: சென்னை அயனாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது மாற்றுதிறனாளி சிறுமி பல மாதங்களாக பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஜூலை 17ஆம் தேதி மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உள்ளிட்டோரும் இதில் அடங்குவர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர்கள் அவர்களை சரமாரியாக தாக்கி இருந்தனர். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அன்றைய தினம் கைதிகள் 17 பேருக்கும் நீதிமன்ற காவலில் 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில் தான் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்கள் இருவர் முன்னிலையில் புழல் சிறையில் இன்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுகிறார்.
கொலை பலாத்காரம் போன்ற தீவிரமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதற்காக அடையாளம் அடையாள அணிவகுப்பு நடைபெறும். இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவார்கள், என்பது குறிப்பி டத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்