இன்று சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் திமுக தலைவர் கலைஞர் நலமாக உள்ளார். அண்மையில் நடந்த சிகிச்சைக்கு பிறகு லேசான காய்ச்சல் இருந்தது அதனால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் மற்றபடி அதிர்ச்சிக்குரிய சம்பவம் எதுவும் இல்லை எனவே வந்தந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்க மத்திய பெண் அமைச்சர் மறுப்பு பற்றிய கேள்விக்கு, துணை முதல்வர் அரசியல் மற்றும் அரசு சம்பந்தம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதற்கு அதாவது ஓபிஎஸ்ஸின் சகோதரர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதற்கு நன்றி தெரிவிக்க சென்றேன் என கூறியுள்ளார். எப்படி அரசின் ராணுவ ஹெலிகாப்டரை தனிப்பட்ட முறையில் உதவிக்கு கொடுக்க முடியும். எனவே விதியை மீறி ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்த நிர்மலா சீதாராமனும், உதவி பெற்ற ஓபிஎஸ்சும் பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதேபோல் ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்ல இபிஎஸ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தேர்தலை சந்திப்பதை போல சிறையையும் சந்திக்கும் நேரம் வரும். அவர்களின் ஊழல்களை திமுக பட்டியலிட்டு ஆளுநர் முன் வைத்துள்ளோம் எனவும் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்