சூப்பர் சிங்கர் போட்டியில் மக்கள் இசை கலைஞர் செந்தில்கணேஷ் முதலிடம் பிடித்து பெற்றி பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் 6 -வது சீசன் இறுதிப்போட்டி இன்று சென்னையில் நேரு உள் விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது. செந்தில்கணேஷ், ரக்ஷிதா, மாளவிகா, அனிருத், சக்தி, ஸ்ரீகாந்த் ஆகிய 6 பேரும் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
மக்கள் இசை கலைஞர் செந்தில்கணேஷின் வருகையின் போதும், ஒவ்வொரு பாடலை பாடி முடித்தபோதும் அரங்கத்தினர் அதிக ஆரவாரம் செய்து மக்கள் இசையை கொண்டாடினர். அவர், ’புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே..’என்ற பாடலை பாடி முடித்தபோது, அரங்கத்தினர் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர். பாடகர்கள் மாணிக்கம் விநாயகம், வீரமணி ஆகியோர் மேடைக்கே சென்று வாழ்த்தினர். அப்போது மாணிக்கம் விநாயகம், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்காவிடம், ’50 லட்சம் வீடுதானே பரிசா கொடுக்குறாங்க. இவன் பாட்டுக்கு 3 வீடு கொடுக்கணும்’என்று வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் செந்தில்கணேஷ் சூப்பர் சிங்கர் டைட்டிலை தட்டிச்சென்றார். அவருக்கு 50 லட்ச த்திற்கான வீடும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பும் பரிசாக கிடைத்தன. அவர் வெற்றி பெற்றதும், மக்கள் இசைக்கலைஞர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து மகிழ்ந்தார். இது மக்கள் இசைக்கு கிடைத்த வெற்றி என்று சொன்ன செந்தில், மக்கள் இசையை இன்று உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட செய்த விஜய் டிவிக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, தான் அழைத்து வந்திருந்த மக்கள் இசைக்கலைஞர்களை மேடையேற்றி அவர்களின் திறமைகளையும் உலகறியச்செய்தார் செந்தில்கணேஷ்.
இப்போட்டியில், ரக்ஷிதாவுக்கு 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டது. 2 லட்சம் பரிசு பெற்றார் மாளவிகா. டைட்டில் வின்ன ருக்குத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு என்று இருந்தபோதும், தன் இசையில் பாடும் வாய்ப்பை ஸ்ரீகாந்துக்கும் வழங்கியிருக்கிறார் ரகு மான் என்று அறிவிக்கப்பட்டது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது ரசிகர்களுக்கு.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்