அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலையில் செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்லும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நுண்ணீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத எச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் போல, இதுதான் இவர்களின் இன்றைய நிலைமை. தமிழகத்தில் கழகங்களோடு கூட்டணி அமைத்து பதவிக்கு வந்ததை பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சில பேருக்கு நாக்கில் சனி இருப்பதாக நான் கூறுவேன். பாஜக தலைவர் இருக்கும்போதே அவர்கள் நாக்கில் சனி விடமாட்டேன் என்கிறது. இந்திய அள வில் தமிழகத்தல்தான் ஊழல் அதிகமாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது வேடிக்கையானது. பழனிசாமி அரசை தாங்கிப் பிடிப்பது யார் என்று சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லும்.
கடந்த ஆண்டு முடிய வேண்டிய ஆட்சி இன்னும் தொடருகிறது என்றால் யாரால், ஆட்சி தொடர உதவியாக இருந்துவிட்டு மக்கள் நம்பிக்கையில்லாத இந்த அரசை இன்றைக்கு ஊழல் ஆட்சி என பாஜக தலைவர் சொல்வது வெறும் கண் துடைப்புதான். இவ்வாறு கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்