தைரியம் உள்ள முதலமைச்சராக இருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சட்ட மன்றத்தை கூட்டி மீண்டும் முதலமைச்சராகி காட்டுங்கள். அப்படி செய்தால் இந்த மேடையிலேயே தூக்கில் தொங்க தயார் என்று எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சவால் விட்டுள்ளார்.கோவை கொடிசியா மைதானத்தில் அமமுக பொதுக்கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கூறியதாவது,
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சசிகலா, டிடிவி தினகரன் போட்ட பிச்சையில் தான் அமைச்சர்க ளாக உள்ளனர். தினகரன் நினைத்திருந்தால் அமைச்சரவையை மாற்றி இருக்கலாம். சுயமாக வளர்ந்ததாக கூறும் எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழுந்ததை தமிழக மக்கள் பார்த்துள்ளனர். ஜெயலலிதா இருந்திருந்தால் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்க முடியாது.
தைரியம் உள்ள முதலமைச்சராக இருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் முதலமைச்சராகி காட்டுங்கள். இல்லையேல் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராகி காட்டுங்கள். அப்படி செய்தால் இந்த மேடையிலே தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும், இரண்டு அம்மாவாசைக்குள் இந்த ஆட்சி கலையும் எனவும் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்