மும்பையில் பெய்துவரும் கனமழையால் மும்பை நகரமே மழை வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து மழைபொழிந்து வருவதால் மும்பையில் பல நகரங்களில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அநேக ரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் புறநகர் செல்லும் ரயில்கள் தாமதமாகவும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு மிருக்கின்றன. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எங்கும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவையிலும் மந்தம் ஏற்பட்டதால் மும்பை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பால்கர் மாவட்டம் வசாய் நகரில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல் மும்பையில் டப்பாவாலாக்கள் தங்களது சேவையை இன்று நிறுத்திகொண்டுள்ளனர். இந்நிலையில் நாளையும் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்