பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், #GobackAmitShah என்கின்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழு வதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
இந்நிலையில், சமூகவலைதளமான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டி, கறுப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டிவிட்டரில் இதேபோல், #Gobackmodi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்