காரியாபட்டி :
காரியாபட்டி அருகே, கழுவனச்சேரி அரசுப் பள்ளியில் இடவசதியில்லாததால் மாணவ, மாணவியர் மரத்தடியில் படிக்கின்றனர். ஊருக்கு வெளியே ஒரு கி.மீ தூரத்தில் கட்டப்படும் புதிய கட்டிடமும் தரமில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரியாபட்டி அருகே, கழுவனச்சேரி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்த கிராமத்தில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனையத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.1.60 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தை ஊருக்குள் கட்டாமல், ஊருக்கு வெளியே ஒரு கி.மீ தூரம் நடந்து செல்லும் அளவில், கண்மாய் பகுதியில் கட்ட தொடங்கினர். அப்போது கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஒப்பந்ததாரர் கிராமத்து மக்களை சரிக்கட்டி, அதன்பின்னர் கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக கட்டிடப் பணி நடந்து வருகிறது. இதனால், ஊரில் பள்ளியில் மரத்தடியில் மாணவ, மாணவியரை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். புதிய கட்டிடம் திறக்கப்பட்டாலும் மாணவ, மாணவியரை அனுப்ப மாட்டோம் என என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கிராமத்து மக்கள் கூறுகையில், ‘எங்கள் ஊர் பள்ளிக்கு புதிய கட்டிடத்தை ஊருக்குள் கட்டாமல், ஊருக்கு வெளியில் கண்மாய் நிறைந்து மறுகால் செல்லும் பகுதியில் கட்டி வருகின்றனர். மாணவ, மாணவியர் ஊரில் இருந்து 1 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். மழை பெய்தால் பள்ளிக் கட்டிடத்தைச் சுற்றி தண்ணீர் நிற்கும். மேலும், கட்டிடத்திற்கு போதிய அளவிற்கு வானம் அமைக்கவில்லை. இப்போதே கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது.
இந்த ஒப்பந்ததாரர் காரியாபட்டி பேரூராட்சியில் கட்டிய வணிக வளாக கடைகள் அனைத்தும் தரமற்று உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிக்கட்டிடம் தரமில்லாமல் இருப்பதால், எந்த நம்பிக்கையில் அனுப்புவது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கட்டிடம் வேலை நடந்து வருகிறது. இன்னும் மேலே தட்டோடு பதிக்கப்படவில்லை. தரைத்தளம் பிளந்து கிடக்கிறது. எனவே, இந்த பள்ளிக்கட்டிடத்தில் படிக்க அனுப்ப மாட்டோம். ஆசிரியர்கள் மரத்தடியில் பாடம் நடத்தட்டும்’ என்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்