ரஜினியும் கமலும் ஒன்றிணைந்தால் புரட்சி ஏற்படாது, வறட்சி தான் ஏற்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல், ரஜினி என யார் அரசியலுக்கு வந்தாலும், தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. ரஜினியும், கமலும் ஒன்றிணைந்தால் புரட்சிக்கு பதில் வறட்சி தான் ஏற்படும். 2019-இல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலிலும், 2021-இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தான் வெற்றிபெறும்.
தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டப்படி தான் ஆளுநரும் அரசும் நிர்வாகம் செய்கிறது. நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் செயல்படுகிறார். யாரும் எந்த விதிமுறையையும் மீறவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என பேசி வருகிறார். பொறுப்பு ஆளுநர் இருந்த போது, நிலையான ஆளுநர் வேண்டும் என கூறினார். இப்போது நிலையான ஆளுநர் நியமிக்கப்பட்ட பிறகு செயல்பாடு சரியில்லை என குறை கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்