img
img

ஆளுநருக்கு அதிகாரமில்லை - உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாராயணசாமி மகிழ்ச்சி!
புதன் 04 ஜூலை 2018 16:39:42

img

டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. 

"அரசியல் சாசனத்தை மதிக்கும்படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்" என்று நீதிபதி தீபக்மிஸ்ரா தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.  

இதையடுத்து இன்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உற்சாகமாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

"புதுச்சேரியில் நான் பதவியேற்றதிலிருந்து துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்றும், அவரின் அதிகார வரம்பு மீறல் தொடர்பாகவும் 19 முறை கடிதம் எழுதியுள்ளேன். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது.

அமைச்சரவை எடுக்கும் முடிவை அனுப்ப வேண்டுமே தவிர அதில் கை வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. துணைநிலை ஆளுநர் அதிகாரிகளை அழைத்து தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கோப்புகள் தொடர்பாக விளக்கம் வேண்டுமென்றால் செயலரை அழைத்து பேசவேண்டும். செயலர்கள் செல்லும் முன் துறை அமைச்சரின் ஆலோசனை பெற வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு உள்ள அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. கோப்புகள் அனுப்பும்போது காரணங்கள் சொல்லி திரும்பி அனுப்ப துணைநிலை ஆளு நருக்கு அதிகாரங்கள் இல்லை.  நீதிமன்றம் அதை வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறியிருப்பது துணைநிலை ஆளு நருக்கு முடிவெடுக்க தனிப்பட்ட அதிகாரம் இல்லை. முழு அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது. இவைபற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த தரப்பிலும் சரியான பதிலும், நடவடிக்கையும் இல்லை.

இவை அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கும் இது பொருந்தும் என தீர்ப்பில் கூறுப்பட்டுள்ளது. இந்த சூழ்நி லையில் இந்த தீர்ப்பு வரவேற்க தக்க தீர்ப்பு. "உச்சநீதிமன்ற தீர்ப்பை யார் மீறினாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தான் முதலில் தொடர்வேன். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img