சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த பிரபல ரவுடி பினு தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பினுவை கடந்த 23-ம் தேதி ஜாமினில் விடுவித்திருந்தது. ஜாமின் நிபந்தனைப்படி காவல்நிலையத்தில் கையெழுத்திடாமல் பினு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது, சிறையிலிருந்து வந்தது முதல் இன்று வரை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட பினு வரவில்லை என போலீஸார் கூறியுள்ளனர்.
முன்னதாக கடந்த சில மாஙத்களுக்கு முன்னதாக பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கத்தில் ரவுடி கும்பல் ஒன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, பிப்ரவரி 6-ல் இரவு கொண்டாட்டத்தில் கூடிய 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். ரவுடி கூட்டத்தின் தலைவன் பினு போலீஸ் பிடி யில் இருந்து தப்பினான். தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகள் 100 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நோக்கமே பிரபல ரவுடி ராதா கிருஷ்ணனை ஒழிக்க வேண்டும் என்பது தான் என கூறப்பட்டது.
இதனால், சென்னையில் ஓய்ந்திருந்த ரவுடிகள் மோதல் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கியது. இதையடுத்து, தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகளை தேவைப்பட்டால் சுட்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டனர். இந்நிலையில் ரவுடி பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்தான். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி பினு, கடந்த 23ம் தேதி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் தற்போது நிபந்தனை ஜாமின் படி செயல்படாமல் தப்பியோடியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்