கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். கதவுகளை மூடியவர்களே அதனை திறக்க கூறுகின்றனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து இன்று காலை சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். முரண்பாட்டின் மொத்த சின்னம் திமுக தான், நேரத்திற்கும் காலத்திற்கும் தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்வதில் அவர்களை விட சிறந்தவர்களை பார்க்க முடியாது.
1995ஆம் ஆண்டு ஆளுநரை பற்றி சட்டப்பேரவையில் பேசிய போது, ஆளுநர் குறித்து பேசக்கூடாது என்று 1999ல் திமுக தான் முடிவு எடுத்தது. அன்று கதவை பூட்டி விட்டு இன்று மீண்டும் அவர்களே திறக்க வேண்டும் என்கின்றனர் இது எந்த வகையில் நியாயம்?.
தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தவே மாவட்டந்தோறும் ஆளுநர் செல்கிறார். ஆட்சி அதிகாரத்தில் அவர் தலையிடுவது இல்லை. ஆளுநர் தனது வேலையில் ஈடுபட்டுள்ளார், தமிழக அரசும் தனது வேலையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்