img
img

ஆளுநருக்கு அதிமுக காவலா? அதிமுகவுக்கு ஆளுநர் காவலா?
செவ்வாய் 26 ஜூன் 2018 13:27:33

img

ஆளுநரைப் பற்றி சட்டப்பேரவையில் பேசக்கூடாது என்று பேரவை விதிகளை 1999ஆம் ஆண்டு மாற்றியது திமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரி வித்துள்ளார். இது உண்மையா என்பதை திமுக விளக்கட்டும். ஆனால், அந்த விதிகளை திமுக ஏன் மாற்றியிருக்கும் என்பதற்கு மட்டும் காரணம் எல்லோருக்கும் தெரியும்.

1993ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவின் ஆட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருந்த நேரம். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் சென்னாரெட்டி. ஆந்திராவில் மூன்றுமுறை முதல்வராக இருந்த அவரை, அந்த மாநில அரசியல் காரணமாக ஆளுநராக நியமித்தார் பிரதமர் நரசிம்மராவ். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலு வலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக கள ஆய்வு செய்தார். ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபணை எழுப்பினார். ஜெயலலிதா விட்டுவிடவில்லை

அதைத் தொடர்ந்து ஆளுநர் மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுவதாக ஜெயலலிதா பலமுறை குற்றம்சாட்டினார். அவரை ஜெயலலிதா மரியாதைக்குக் கூட சந்திப்பதில்லை. இதற்கு காரணம் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன் சாமி வழக்குத் தொடர மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆளுநர் ஒத்து ழைப்பு கொடுத்தார். சுப்பிரமணியன் சாமி கொடுத்த புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவற்றை விசாரிக்கவும் தொடங்கிவிட்டார்.

அதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு உரிய மரியாதையை ஜெயலலிதா கொடுப்பதில்லை என்ற விமர்சனம் பரவத்தொடங்கியது. எனவே, 1995ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரை ஏன் சந்திப்பதில்லை என்பதற்கு அபாண்டமான காரணத்தை வெளியிட்டார் ஜெயலலிதா. ஆளுநர் மாளிகைக்கு ஒருமுறை சென்றபோது, ஆளுநர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பேரவையிலேயே தெரிவித்தார். இதையடுத்து அன்றைக்கு நிதிய மைச்சராக இருந்த நெடுஞ்செழியன் ஆளுநரைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக அரசு எதிர்க்க அஞ்சுகிறது. அவர் சட்டப்படிதான் ஆய்வு நடத்துவதாக முதல்வரும் அமைச்சர்களும் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆளுநரோ ஒருபடி மேலே போய் எதிர்க்கட்சிகளை நேரடியாகவே மிரட்டும் தொனியில் அறிக்கை வெளி யிடுகிறார்.

இதைக் கண்டிக்க வேண்டிய அதிமுக அமைதியாக இருக்கிறது. ஆனால், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் திமுக ஆளுநரைக் கண்டித்து தீவிரமாகப் போராடுகிறது. திமுகவின் போராட்டத்தை அடக்க ஆளுநரே நேரடியாக அதிகாரத்தை கையில் எடுக்கிற அளவுக்கு போயிருக்கிறார். தனது பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை என்று அவர் மிரட்டியிருக்கிறார்.

நெருக்கடி நிலையில் மிசா சட்டத்துக்கே பயப்படாத கட்சி திமுக. ஆளுநரின் மிரட்டலுக்கெல்லாம் பயப்படாது என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக அறி விதார். இந்த விவகாரத்தை பேரவையில் பேச முயற்சித்தபோது ஆளுநரைப் பற்றிப் பேச பேரவை விதிகளில் இடம் இல்லை என்று சபாநாயகர் தனபால் கூறுகிறார்.

சபாநாயகரின் இந்த மறுப்பு விவாதம் ஆனவுடன், இப்போது, ஆளுநரைப் பற்றி பேச தடைவிதிக்கும் விதிகளை மாற்றியதே திமுகதான் என்று ஜெயக்கு மார் கூறியிருக்கிறார். 1999 ஆம் ஆண்டு திமுக இந்த விதிகளைத் திருத்தியதாக ஜெயக்குமார் கூறுகிறார். அப்படியானால் இது மாற்றமுடியாத விதி அல்லவே. 1999 ஆம் ஆண்டு ஆளுநராக இருந்தவர் ஜெயலலிதாவின் தோழியான பாத்திமா பீவிதான். அவருக்கு எதிராக பேசுவதை ஏன் திமுக விரும்பவில்லை என்பது புரியவில்லை. அதையும்கூட ஜெயக்குமாரே கூறியிருக்கலாம். அனேகமாக அதிமுகவினர் யாரும் ஆளுநரை அசிங்கமாக பேசிவிடக்கூடாது என்பதற்காக திமுக செய்திருக்கலாம் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

ஆளுநரைப் பற்றிப் பேசத்தான் பேரவை விதிகளில் இடமில்லை. சரி போகட்டும். எஸ்.வி.சேகரைப் பற்றி பேசவும், குட்கா ஊழலைப் பற்றி பேசவும்கூட ஏன் சபாநாயகர் தடை விதித்தார் என்பதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாமா?

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img