நாமக்கல் திமுகவினரை போல் மு.க.ஸ்டாலினையும் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரி வித்துள்ளார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கறுப்பு கொடி காட்டினர். இதையடுத்து கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதில், 192 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இதற்கு உடனடியாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று காலை நாமக்கல்லில் திமுகவினர் 192 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், சம்பவம் குறித்து தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில்,
ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தனது அடுத்த டிவிட்டர் பதிவில், காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் ஏ/சி யில் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு திமுகவினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்