img
img

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சனை இல்லை! - குமாரசாமி
திங்கள் 18 ஜூன் 2018 11:58:46

img

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல், காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்தம் மற்றும் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் என குடகு மாநிலமே கனமழையால் குளிர்ச்சியடைந்துள்ளது. மேலும், தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அதேசமயம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரி நதிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும். ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்கான இருமாநில உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், இன்னமும் காவிரி நீர் திறந்துவிடப்படவில்லை. இந்நிலையில், இன்று மதுரைக்கு வந்திருந்த கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ‘கடவுளின் அருளால் நல்ல மழை பெய்து காவிரி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், இரு மாநிலங்களுக்கும் நீரைப் பங்கிடுவதில் பிரச்சனை இருக்காது. எனவே, தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிடுவதில் எந்த பிரச்ச னையும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img