டெல்லி:
பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார். இந்த தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்க ளில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.
நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.
அவர் இந்த நான்கு நாட்களில் நாடாளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய பேசியுள்ளார். எல்லா வாரமும் வானொலி மூலம் , மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒரு முறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை.
மக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஜிஎஸ்டி, மத பிரச்சனை, ஜாதி படுகொலை, வங்கிகள் செய்யும் மோசடிகள் என எதிலும் பிரதமர் பேசவில்லை. கூடுதல் தகவலாக, பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் அதிக நாட்களை நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் கழித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்