காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன் ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசமாக கூறினார். 2019 ல் மையத்தில் பதவிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதை காங்கிரஸ் உறுதிப்படுத்தியது.இதனால் சில சில தெலுங்கு தேசம் தலை வர்கள் கூட்டணிக்கு விரும்பினர்.
கர்நாடக முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது கூட சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் இந்த நிலையில் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஒரு சாத்தியமான நிலை உருவானால் அதற்கு எதிராக ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்து, தான் தூக்கில் தொங்குவதாக ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
கர்னூலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
"காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி என்பது குறித்த கேள்விக்கே இடமில்லை, ஆனால் அது நடந்தால், நானே தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். இது எனது தனிபட்ட கருத்து அல்ல நான் கட்சியின் சார்பாக பேசுகிறேன். எனினும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு கூட்டணியும் முடிவு செய்யப்படும். என கூறினார்.