சென்னை
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு. கஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை குறி வைத்து சுட்டது திட்டமிட்ட சதி. முதல்வர், டிஜிபி மாவட்ட அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு துணை போய் உள்ளனர் . கண்துடைப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ள கமிஷனால் பயன் இல்லை. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
13 பேர் கொல்லப்பட்டதற்கும், போராட்டத்துக்கு முன்னின்று நடத்தியவர்களை சுட்டதும் திட்டமிட்ட சதி. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய வர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள்தான் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.
கண்துடைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தால் பயனளிக்கப் போவதில்லை. இந்த கமிஷனே போலி கமிஷன். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே பேச அனுமதி கொடுத்துவிட்டு பேரவையில் பேச அனுமதிக்காமல் தடுத்து விட்டனர். துப்பாக்கிச்சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்றால் நாங்கள் ஏன் அவைக்கு வரவேண்டும்? என கூறினார்.