img
img

உங்கள் வீட்டிற்கு வந்தால் தோசை சுட்டு தருவீர்களா - பெண்களுடன் பிரதமர் மோடி
திங்கள் 28 மே 2018 13:43:32

img
மும்பை
 
பா.ஜ.க தலைமையிலான அரசு மத்தியில்  நான்கு ஆண்டுகள் நிறைவுற்றதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பிரதம மந்திரி  உஜ்ஜவாலா யோஜனா (PMUY)  திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.பிரதம மந்திரி உஜ்ஜவாலா யோஜனா, மோடி அரசாங்கத்தின் மிக வெற்றிகரமான முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த கலந்துரையாடலில் பேசிய பிரதமர் மோடி   நாடு முழுவதும் பல மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.
 
"உஜ்ஜவாலா யோஜனா ஏழைகளின் உயிர்களை பலப்படுத்தியுள்ளது,  தலித்துகள், பழங்குடி சமூகங்கள். இந்த முன்முயற்சி சமூக மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் பல மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.2014 வரை, 13 கோடி குடும்பங்கள் எல்பிஜி இணைப்பு கிடைத்தது. இதன் அர்த்தம், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக 13 கோடியை கொண்டிருந்தது. எல்.ஜி.ஜி. இணைப்புகளை  பெரும்பாலும் பணக்காரர்கள்தான் வைத்து இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில், 10 கோடி புதிய இணைப்புகள் சேர்க்கப்பட்டு, ஏழைகள் பயனடைந்தனர்.
 
நான் இளைஞனாக இருந்தபோது, என் அம்மா சமையல் செய்வார், நான் அப்போது வரும் புகையை நினைத்து கொள்கிறேன். என அவர் கூறினார்.இந்த கலந்துரையாடலில் தமிழகம் கிருஷ்ணகிரியைச் செர்ந்த உத்தரம்மா என்ற பெண்ணும் கலந்து  கொண்டார். அவரிடம் வணக்கம் என தமிழில் பேசிய பிரதமர் மோடி  உங்கள் வீட்டிற்கு வந்தால் தோசை சுட்டு தருவீர்களா எனக் கேட்டார். அதற்கு அவரும் தருகிறேன் எனக் கூறினார். இவ்வாறு ஓவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிரதமர் மோடியிடம்  தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img