தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீதும், நடத்தியவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த குடும்பத்தி னருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துளியும் ஆட்சியில் இருக்க தகுதியற்ற கொலைகார எடப்பாடி அரசே உடனே பதவி விலக செய்ய வேண்டும்.
தூத்துக்குடி சம்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும். இணையதள சேவையை முடக்காதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் (DAA ) மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் ( RYA) சார்பில் இன்று காலை முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்திய அவர்கள், முதல் அமைச்சர் வீட்டை நோக்கி செல்ல முற்பட்ட போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்