தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழக போலீசார் திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கி ச்சூடு நடத்தினர். இதில் 10பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அண்ணாநகர் பகுதியில் போலீசார் போராட்டகாரர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்களின் கல்வீச்சை தொடர்ந்து போலீசார் இன்று மீண்டும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காளியப்பன் (22) என்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழ்நாடு போலீசார் 2வது நாளாக தொடர்ந்து திணறி வருவதால் துணை ராணு வத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்