தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நூறாவது நாள் மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியினால் வன்முறை வெடித்தது. அதிகம் திரண்ட போராட்டங்கரர்களை தடுத்து நிறுத்த முடியாமல் திணறிய போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பள்ளி மாணவி உட்பட 11 பேர் இறந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து எல்லா தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவர, திரைப்பட நடிகர் சத்யராஜ் இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில்,
''தூத்துக்குடியில் நடந்த கொடுமைக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேருக்கும், அந்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நெஞ்சம் பதைக்க வைக்கிறது. மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்