img
img

ராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி
செவ்வாய் 22 மே 2018 14:10:27

img

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் 27-ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிது. அவர் உயிரிழந்த கடைசி தருணம் வரை  அவர் உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991-ல் அளித்த உருக்கமான பேட்டி. தற்போது மீண்டும் உங்களுக்காக,

ராஜீவ்காந்தியின் கடைசி மரண நிமிடங்கள் வரை உடனிருந்து அவராலேயே உயிர் தப்பிய ஜெயந்தி நடராஜன் கதறி அழுதபடி நேரில் கண்டதை பேட்டியாக அளித்தார். "ஸ்ரீபெரம்புதூரை நோக்கி நாங்கள் பயணமாவதற்கு முன்பு ராஜீவின் பத்திரிகை ஆலோசகர் சுமன் துபே இரண்டு வெளிநாட்டு பெண் நிருபர்கள் ராஜீவை பேட்டி எடுக்க விரும்புகிறார்கள் இதை அவரிடம் தெரிவியுங்கள் என்று கூறினார்.

நானும் நந்தம்பாக்கத்தில் அவரிடம் விவரத்தை கூறினேன். அவர் பூந்தமல்லி நிகழ்ச்சி முடிந்த பின் காரில் ஏற்றிவிடுங்கள். காரிலேயே பேட்டி தருகிறேன் என்றார்.அதன்படி அந்த நிருபர்கள் காரிலேயே பேட்டி எடுத்தனர். கார் ஸ்ரீபெரம்புதூரை அடைந்தது. முதலில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காரில் ஏறி மேடைக்கு அருகில் இறங்கினார்.

நானும் காரிலிருந்து இறங்கி ராஜீவுடன் சேர்ந்து நடந்து சென்றேன். திடீரென ஞாபகம் வந்தவராக திரும்பிய ராஜீவ் ''அந்த பெண் நிருபர்கள் எங்கே'' அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாதவாறு நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும் என்றார். நான் உடனடியாக நகரவில்லை ''ஜெயந்தி வெளி நாட்டு நிருபர்கள் அவர்களை நாமதான் பத்திரமா பாதுகாக்கணும் புறப்படுங்க...'' என்றார் வேறு வழியில்லாமல் திரும்பி மெதுவாக நடந்தேன்.

எட்டு அடிதூரம்தான் நடந்திருப்பேன் ''டமார் '' என்ற ஒரு பெரும் சத்தம் என் காதில் கேட்டது. திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன். ராஜீவ்காந்தி நின்றிருந்த இடத்தில் தீப்பிழம்பும் புகையுமாக இருந்தது. போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் அங்கும் இங்குமாக ஓடினர். ஒன்றும் புரியாமல் நான் ஸ்தம்பித்து நின்றேன். திடீரென ஒரு கதறல் ''ராஜீவ் காந்தி எங்கே''

சடாரென அந்த இடத்திற்கு வந்தேன் போலீசார் தடுத்தும் கேட்காமல் ராஜீவ்  இருந்த இடத்திற்கு ஓடினேன். நான் முதலில் பார்த்தது  மெய்க்கா ப்பாளர் குப்தாவைதான். நான் பார்த்து கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது. ராஜீவ் காந்தியை தேடினேன். ஒரு உடலின் தலை முடியை பார்த்தவுடன் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல புரட்டிப்பார்த்தேன். காலில் போடப்பட்டிருந்த ஷூவில் இருந்த ''லோட்டா'' என்ற எழுத்தை பார்த்த வுடன் அதிர்ந்து போனேன்.

காரணம் ராஜீவை விமானநிலையத்தில், சந்தித்தபோது அவரின் ஷூவில் அந்த எழுத்துக்களைப் பார்த்தேன். ராஜீவின் உடல்தான் என்று அறிந்த நான்'' அய்யோ'' என்று அலறினேன் மூப்பனார் பக்கத்தில் ஓடி வந்தார், அவரும் கதறி அழுதார்.

 rajeev

கடைசியில், எங்கள் உயிர் மூச்சான உத்தமமானவர், இப்படி அரசு ஆஸ்பத்தரி சவக்கிடங்கில் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே'' என்று கதறி அழுதார் ஜெயந்தி நடராஜன்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img