புதுச்சேரி : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக தேர்தல் முடிவைந்த பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ரூ.80 நெருங்கி யுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்திவைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பியும், ஆட்டோவிற்கு மலர்வலையம், மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்