சென்னை:
காவிரி வழக்கு தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் பேட்டி அளித்துள்ளார்.காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீரை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு என அவர் தெரிவித்தார். காவிரி விகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டே தீரவேண்டும். காவிரி நீர் மேலாண் ஆணையம், அதிகாரம் படைத்த அமைப்பு தான் என்று ஜெயக்குமார் கூறினார்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அரசின் வரி வருவாய் பாதிக்கும் என அவர் கூறினார். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வாட்வரி குறைக்கப்படாது. வரி வருவாயை இழக்க மாநில அரசு தயா ராக இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பின்னர் பேசிய அவர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே கருத்துவேறுபாடு இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே சிண்டு முடிய வேண்டாம் என்றும் கூறினார். இடஒதுக்கீட்டில் பெண்களுக்காக சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்