விலை போவதைத் தடுக்க கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்ஸில் தங்க வைக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.
கர்நாடகாவில் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை என்று 'டெக்கான் ஹெரால்ட் 'பத்திரிகை கூறியுள்ளது. பெங்களூருவில் சங்கரிலால் ஹோட்டலில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 37 எம்.எல்.ஏ-க்களில் 32 பேர் மட்டுமே வந்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனந்த் சிங், நாகேந்திரா, பீமா நாயக், கணேஷ் ஹக்கேரி, யஷ்வந்த் கௌடா, சமீர் அகமது, அகந்தா ஸ்ரீநிவாசமூர்த்தி, துக்காராம், மகேன்டேஷ், கவுஜாலகி, சதீஷ் ஜராகிகோலி, ரமேஷ் ஜராகிகோலி ஆகியோர் காணாமல் போன காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆவார்கள்.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை கர்நாடகாவுக்கு வெளியே ஏதாவது ஒரு மாநிலங்களில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தங்க வைத்தால்தான் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்ப தால் பஞ்சாப், மிஸோரம், புதுச்சேரி மாநிலங்களுக்கு எம்.எல்.ஏ-க்கள் கொண்டு செல்லப்படலாம்.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், இரு சுயேச்சைகள் சேர்ந்து 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு போதுமானது. எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் திட்டத்துக்கு 'ஆபரேஷன் லோட்டஸ்' என்று பாரதிய ஜனதா கட்சி பெயர் வைத்துள்ளதாம். படியும் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலைக் கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சியின் திட்டம். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 20 மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்களை பாரதிய ஜனதா கட்சி விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்